எல்லையில் இந்தியா-சீனா இடையே நடக்கும் மோதல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது: லடாக் மற்றும் சிக்கிம் பகுதியில் அமைந்திருக்கும் சீன எல்லையில் நிலவும் நிலவரம் குறித்த குழப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுகுறித்து, அரசு தெளிவுபடுத்த வேண்டும். எல்லையில் சீனாவுடன் நிலவும் நிலவரத்தில் அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பது மிகப்பெரிய யூகத்துக்கே வழி வகுக்கும். மிகவும் நெருக்கடியான நேரத்தில் நிச்சயமற்ற […]
