இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பந்துவீசவே தெரியவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதி வரை சென்று மோசமாக வெளியேறியது.
இதனையடுத்து இந்திய அணியில் உள்ள பவுலர்கள் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் அஸ்வினால் தான் இந்தியா தோற்றது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனிஷ் கனேரியா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த டி20 உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாடியிருக்கவே கூடாது. ஆஸ்திரேலிய களத்தில் அவர் சிறப்பாக செயல்படவே முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மட்டுமே பொருந்தக்கூடிய வீரரை டி20க்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

அஸ்வின் குறித்து நன்கு புரிந்துவைத்திருந்த விராட் கோலி, தான் கேப்டனாக இருந்தபோது அவரை டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக மட்டுமே பயன்படுத்தினார். ஏனென்றால் ஆஃப் ஸ்பின்னர் எனக் கூறிக்கொள்ளும் அஸ்வினுக்கு ஆஃப் ஸ்பின்னே போடத்தெரியாது என தனிஷ் கூறியுள்ளார்.