பிக்பாஸ் சீசன் 6 யில் எல்லை தாண்டி போகும் ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகை ரஷிதாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததுமே “நாம ஏன் ப்ரண்டா இருக்கக்கூடாது” என கேட்டு ரஷிதா மீது இருக்கும் அன்பை கூறினார்.

ஆனால் இப்போது சமீபத்திய எபிசோடில் ரஷிதா பாட்டுப்பாடி கொண்டு இருக்க அங்கு வந்த ராபர்ட் மாஸ்டர் என்னை பற்றி பாடு என கூறினார். அதற்கு ரஷிதா, நேற்றுத்தான் அவ்வளவு சொன்னேன் நார்மலா இருங்கனு, இன்னைக்கும் ஆரம்பிக்காதீங்க என்று கொஞ்ச.
அங்கு வந்த ஷிவின், “ராபர்ட்டை அண்ணாணு சொல்லிவிடு அப்போ தான் இவர் அடங்குவாரு” என்றார். பின்னர் ரச்சிதாவும் அவரை “அண்ணன்” என சொன்னார்.

இதனால் டென்ஷனான ராபர்ட், “நான் அண்ணன் தானே எனக்கு முத்தா கொடு” என்று கேட்டார். அதற்கு ரஷிதா, ” உங்க காலில் விழுகிறேன் என் அன்பு இவ்வளவு தான் ப்ளீஸ்” என்றார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரஷித்தா கணவருடன் கருத்து வேறுபாடில் இருக்கிறார். இந்த நேரத்தில் ராபர்ட் இப்படி நடந்து கொள்வது சரியில்லை. ரொம்ப ஒவராத்தான் போகிறார் என அவரை திட்டிதீர்த்து வருகின்றனர்