யோகி பாபு வின் “கிச்சி கிக்சி” படம் ஜுலை 8 ரிலீஸ்

“கடலை போட ஒரு பொண்ணு வேணும்” படத்தின் பெயர் மட்டும் மாற்றி “கிச்சு கிச்சு” என்ற பெயரில் ஜுலை 8 ம் தேதி வெளியிட படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக திரைக்கு வருகிறது.இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.படத்தை பற்றிய படத்தின் இயக்குநர் ஆனந்த்ராஜன் கூறும்போது,

யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப்படம் காட்டும். வழக்கமாக படங்களில் காமெடியை தொழிலாகப் பண்ணும் யோகிபாபுவைப் பார்த்திருக்கிறோம். இந்தப்படத்தில் யோகிபாபு பண்ணும் தொழிலே பக்கா காமெடியாக இருக்கும்.

யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப்பெண்களை அவர் கடலைப் போட்டு உஷார் பண்ணுவார் என்பது தான் படத்தின் ஹை பாயிண்ட் காமெடி. கடலைப்போட்டு கடலைப்போட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம் கடலைப்போட பெண் தேடும் ஹீரோ அசார் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் இடங்களில் எல்லாம் சிரிப்பால் நம் வயிறு பிதுங்கும். முழுக்க முழுக்க மக்களை ஜாலியாக எண்டெர்டெயின்மெண்ட் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிற படம் இது. நிச்சயம் இந்தப்படம் கமர்சியலாக பெரிய வெற்றிபெறும். அதற்கான எல்லா சாத்தியங்களையும் படத்தில் கையாண்டிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர் ஆனந்த்ராஜன்.

இவர் இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.

Previous post வாரிசு விஜய் புதிய லுக்
Next post திருநெல்வேலி மாவட்டத்தில் சத்துணவு திட்டப் பிரிவில் கணினி இயக்குபவர்க்கு வேலை
%d bloggers like this: