சாதனைக்கு வயது ஒன்றும் தடையில்லை!

வயது என்பது என்றைக்கும் வெறும் எண் என்பதை நிரூபிக்கும் விதமாக குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஹரியானாவைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

தேசிய ஓப்பன் மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வதோதராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 85 வயதிற்கு மேற்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 105 வயதான ராம்பாய் எனும் மூதாட்டி கலந்துகொண்டார். போட்டி தொடங்கியதும் 100 மீட்டர் இலக்கை 45.40 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். 

தொடர்ந்து 200 மீட்டர் தொலைவுக்கான ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட அவர், அதனை 1 நிமிடம் 52.17 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார்.  அதேபோல் 100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஓட்டப்போட்டியில் ராம்பாய் மட்டுமே பங்கேற்று ஓடியிருந்தார். இதில் அவர் புதிய சாதனை படைத்ததோடு, தங்க பதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.

மூதாட்டியின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வயதில், அவர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி புதிய சாதனை படைக்க அவரின் வாழ்க்கை முறையும், தான் எடுத்துக் கொள்ளும் உணவு முறைதான் காரணம் என்கிறார். 

தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து சுமார் 4 கிலோ மீட்டத் தூரம் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வாராம். தினமும் கோதுமை, பால், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதாக கூறுகிறார்.சுத்த சைவமான ராம்பாய், நாள்தோறும் 250 கிராம் நெய் மற்றும் 500 கிராம் தயிரை உணவில் சேர்த்துக்கொள்வார் என்றும் கூறுகிறார். கோதுமை ரொட்டிகளை விரும்பி சாப்பிடும் ராம்பாய், அரிசி உணவை அதிகமாக எடுத்துக்கொள்வது இல்லை என்கிறார்.

ராம்பாய் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் பலரும் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளனர். ராம்பாயின் 62 வயது மகள் ரிலே பந்தயங்களில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Previous post பத்தாம் வகுப்பு தேர்வில் தந்தை பாஸ் மகன் ஃபெயில்
Next post வாரிசு விஜய் புதிய லுக்
%d bloggers like this: