10 ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்
10-ம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.22 சதவீதத்துடன் கன்னியாகுமரி 2-வது இடத்தையும், 95.96 சதவீதத்துடன் விருதுநகர் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 79.87 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதர முக்கிய அம்சங்கள்:

ஆதிதிராவிடர் பள்ளிகள் 78.11 சதவீதம்
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 97.93
கண்டோன்மென்ட் பள்ளிகள் 78.95 சதவீதம்
மாநகராட்சி பள்ளிகள் 81.49 சதவீதம்
வனத்துறை பள்ளிகள் 95.21 சதவீதம்
முழு அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01 சதவீதம்
அரசுப் பள்ளிகள் 85.25 சதவீதம்
இந்து சமய அறநிலையத் துறை பள்ளிகள் 89.43 சதவீதம்
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 89.20 சதவீதம்
நகராட்சிப் பள்ளிகள் 80.85 சதவீதம்
பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 90.60 சதவீதம்
ரயில்வே பள்ளிகள் 100 சதவீதம்
சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 98.31 சதவீதம்
பள்ளிக் கல்வி துறைக்கு கீழ் உள்ள பள்ளிகள் 96.53 சதவீதம்
சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் 14.29 சதவீதம்
சமூக நலத்துறை பள்ளிகள் 91.76 சதவீதம்
பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 78.37 சதவீதம்