5ஜி ஏலத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல்!

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்தி முடிக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

5ஜி நெட் 4ஜி சேவையை விட பத்து மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் நாட்டின் மூன்று முக்கிய நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் ஜியோ ஆகியவை பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற அரசின் கொள்கை முயற்சிகளில் டிஜிட்டல் இணைப்பு முக்கிய பகுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Previous post முக்கிய செய்திகள் – 10.06.22
Next post 10 ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்
%d bloggers like this: