சனிபகவான் சஞ்சாரம் மற்றும் பார்வையால் சிலருக்கு கோடீஸ்வர யோகம்! சனிபெயர்ச்சி பலன்கள்

பொதுவாகவே சனிபகவான் 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இப்போது சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களான மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் மீது விழுகிறது. சனிபகவான் சஞ்சாரம் மற்றும் பார்வையால் சிலருக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. யார் அந்த அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம்.

தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் ஜூன் 5-ஆம் தேதி முதல் வக்கிரமாக இருக்கிறார்.

சனி பகவான் வக்கிரமாக இருப்பதால் சில ராசிகளுக்கு மாற்றங்களைத் தரப்போகிறார். அதில் எந்தெந்த ராசிகள் மாற்றங்களைப் பெறப் போகின்றன, என்பது குறித்து இங்கே காணலாம்.

மேஷ ராசி

சனிபகவான் வக்கிரம் உங்கள் ராசியில் உடல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பண சிக்கல்கள், பொருளாதார சிக்கல்கள் ஆகியவை இருக்காது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ரிஷப ராசி

உங்கள் முழு திறமையும் கண்டறியும் அளவிற்குச் சனி பகவான் சோதனைகளைக் கொடுப்பார். நீங்கள் சோர்வாக மறைவிற்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சிக்கல்களை ஏற்படும். எந்த செயலாக இருந்தாலும் சரியான முறையில் நிர்வகித்து வந்த சிக்கல்களைக் கடக்க முடியும். வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

சனி பகவான் உங்களுக்குத் தொழில் ரீதியான சிக்கல்களைத் தரப்போகிறார். வியாபாரத்தில் பல சிக்கல்களை நீங்கள் காண்பீர்கள். கூடுமானவரையில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எத்தனை சிக்கல்கள் ஏற்பட்டாலும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தொழில் இப்போது இருப்பது போலவே செல்லட்டும் அதனைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

கடக ராசி

சனி பகவான் உங்கள் சுயத்தைத் தீண்டப் போகிறார். மனம், சிந்தனை, உணர்வு ஆகியவற்றில் உங்களுக்குச் சிக்கல்கள் ஏற்படும். சிறு பிரச்சனைகள் கூட உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில், வியாபாரத்தில், தொழிலில் மற்றவர்களுடன் மன சங்கடங்கள் ஏற்படும். சில சிக்கல்களில் மோதல்களில் முடியக் கூட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருங்கள்.

சிம்ம ராசி

இந்த முறை உங்களைச் சனி பகவான் பரபரப்பாக வைத்திருப்பார். சிறு விஷயத்தில்கூட பதறும் அளவிற்கு உங்களது மனநிலை இருக்கும். தாமதமில்லாமல் சின்ன சிக்கல்களாக இருந்தாலும் உடனடியாக தீர்வு காண்பது நல்லது. உறவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கல்களும் கிடையாது. ஆனால் மற்றவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேளுங்கள்.

கன்னி ராசி

பத்திரமாக இருக்கும் சனிபகவான் உங்கள் உறவுகளோடு சோதனை செய்யப் போகிறார். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. தேவையில்லாமல் நீங்கள் உள்ளே நுழைந்தால் அது பெரும் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் போன்றவற்றில் பொறுமையாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களே எதிரியாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. கவனமாக இருப்பது நல்லது.

துலாம் ராசி

துலாம் ராசிக்கு சுப பலன்கள் கிடைக்கக் கூடியதாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்குவதற்கு ஏற்ற காலம். நீங்கள் செய்யும் பணியில் நன்மைகள் உண்டாகும். வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். சிறந்த நபர்களுடன் உங்களுக்கு உறவு ஏற்படும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்கு பல சுப பலன்கள் கிடைத்தாலும், சில எதிர்மறையான விளைவுகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். உங்கள் தாயின் உடல்நிலை மோசமாகலாம்.

உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களின் வேலையில் சுப பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

தனுச ராசி

உங்கள் முயற்சி அதிகரிக்கும். எந்த ஒரு வேலை செய்து முடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும். வேலை தேடி அலைபவர்களுக்கு உகந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். நண்பர்களின் ஆதரவு குறையும்.

மகர ராசி

சனி பகவானின் வக்ர பெயர்ச்சி உங்கள் ராசியை நோக்கி நகர்கிறது. இந்த காலத்தில் உங்களுக்கு பயணங்களும், அதனால் அலைச்சலும் ஏற்படலாம். வேலை மாற்றம், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். எந்த ஒரு செயலை கையில் எடுத்தாலும் அதில் வெற்றி உண்டாகும். எல்லா விஷயங்களிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.

கும்பா ராசி

கும்ப ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி நடக்கிறது. ஜென்ம ராசியில் இருப்பதால் உங்கள் அமைதியின்மையை அதிகரிக்கும். இருப்பினும் உங்களின் எந்த ஒரு பணியிலும் நன்மை பயக்கும். உயர்கல்விக்கு சாதகமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு சென்று படிக்க நினைப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

சிலருக்கு குழப்ப நிலையால் சில மனநலப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதிலிருந்து விடுவித்துக் கொள்ள முயலவும். இளைய சகோதரர் வகையில் நிறைய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வளர்ச்சியும் கூடும். புதிய வேலை அல்லது போட்டித் தேர்வில் நல்ல பலன் கிடைக்கும்.

மீனம் ராசி

சனியின் இந்த நிலை உங்கள் செலவை லாபமாக மாற்றப் போகிறார். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய விரும்பினால், இந்த நேரத்தில் அதைச் செய்யலாம், இது எதிர்காலத்தில் உங்களுக்கு பலன்களைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்ததாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.

Previous post முக்கிய செய்திகள் – 09.06.2022
Next post முக்கிய செய்திகள் – 10.06.22
%d bloggers like this: