“ரோலக்ஸ்” க்கு ரோலக்ஸ் வாட்ச்சை கமல் பரிசளித்தார்

‘விக்ரம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு, கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றைப் பரிசளித்திருக்கிறார்.

இது குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ” இதுபோன்ற தருணங்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகிறது. 

ரோலக்ஸ் கொடுத்ததற்கு நன்றி, அண்ணா ” எனக் குறிப்பிட்டு உள்ளார். 18 கேரட் தங்கத்தில் தயாரான இந்த வாட்ச்சின் விலை 28 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ஆகும்.

கமல் ஹாசன் கையில் அணிந்த வாட்ச்சை சூர்யாவுக்கு கொடுத்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Previous post 2022 ஆம் ஆண்டு B.E.,படிப்பு கலந்தாய்வு முக்கிய தேதிகள்
Next post சேற்றுத் திருவிழா விளாத்திகுளத்தில் மக்கள் உற்சாகம்!
%d bloggers like this: