உம்ரான் மாலிக்கை டெஸ்ட் அணிக்காக மாற்றும் டிராவிட்
இந்திய அணியின் முதல் பயிற்சி முகாம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. வீரர்கள் அனைவரும் பழைய உற்சாகத்துடன் வலைப்பயிற்சிக்கு சென்றனர். அப்போது உம்ரான் மாலிக்கிடம் மட்டும் ராகுல் டிராவிட் அதிக நேரம் செலவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதுவும் உம்ரான் பயிற்சிக்கு செல்வதற்கு முன்னதாகவே ராகுல் டிராவிட் அவரிடம் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அதுவும் பிட்ச்-ஐ காண்பித்து பேசியதால், உம்ரான் நிச்சயம் ப்ளேயிங் 11ல் இருப்பார் எனத்தெரிகிறது.

உம்ரான் மாலிக்கை இந்திய அணியின் டெஸ்ட் பொக்கிஷமாக மாற்ற டிராவிட் முயன்று வருகிறார். அதற்காக உம்ரான் மாலிக்கிடம் ‘ உன்னால் எவ்வளவு வேகமாக வீசமுடியுமே அதை செய்’ என்ற மந்திரம் மட்டுமே கூறப்பட்டுள்ளதாம். இதுபோன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளரை சரியாக செதுக்கினால் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலமாக மாறுவார் என தேர்வுக்குழு மற்றும் டிராவிட் முடிவெடுத்துள்ளனராம்.
இதற்காக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கோச் பராஸ் மாம்ரே, மாலிக்கிற்கு ஸ்பெஷல் வகுப்புகளை எடுத்து வருகிறார். மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோதெரபிஸ்ட்கள், உம்ரான் மாலிக்கின் ஃபிட்னஸ், அவர் எந்தளவிற்கு பனிச்சுமைகளை தாங்குவார் என்பதை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.