பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள்

சிறப்பு கட்டுரைகள்

பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள்

பொற்கால ஆட்சி தந்த புனிதரை நினைவு கொள்வோம்

ஆட்சியாளர்களுக்கு ஒரு ரோல் மாடல் என்றால், அது அகில உலகத்துக்கும் காமராஜர் ஒருவராகத்தான் இருக்க முடியும். தனக்கென வாழாத ஒரு அரசியல்வாதி அவர். அதனால்தான் அவரை தமிழக மக்கள் கர்மவீரர், பெருந்தலைவர், ஏழைப் பங்காளன், கலா(கருப்பு)காந்தி, தென்னாட்டு காந்தி, உத்தமத் தலைவர் காமராஜர் என பல பெயர்களில் அழைத்து மகிழ்ந்தனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, வெள்ளையர்களை எதிர்த்ததால் 9 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து, குமாரசாமி ராஜா, ராஜாஜி, ஒமந்தூரார் என பல முதலமைச்சர்களை தமிழகத்தில் உருவாக்கியவரும், இந்தியாவில் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி என்ற 2 பிரதமர்களை உருவாக்கியவரும் காமராஜர்தான். ஏன்? தன்னை கடுமையாக எதிர்த்த பக்தவச்சலத்தையே முதல்வராக்கி அழகு பார்த்தவர்தான் காமராஜர். இதனால்தான் அவரை ‘கிங் மேக்கர்” என்று அனைவரும் அழைத்தனர். காமராஜரின் 121 வது பிறந்த நாளில் நாட்டுக்கு  அவர் ஆற்றிய தொண்டுடன், அதனால் தமிழகத்தில் கல்வி, சமூக, பொருளாதாரத்தில் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை நினைவு கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கம். 

//குலக்கல்வி திட்டம்//

காமராஜர் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஆண்டு 1954ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாஜி முதல்வராக இருந்த போது குலக்கல்வி திட்டத்தை அறிமுகம் செய்தார். குலக்கல்வி திட்டம் என்பது தன்னுடைய பெற்றோர் என்ன தொழில் செய்தனரோ, அதை அவருடைய பிள்ளைகளும் செய்வது. மேலும், நிதி நெருக்கடியை காரணம் காட்டி 6 ஆயிரம் பள்ளிகளை மூடினார். ராஜாஜியின் இந்த திட்டத்துக்கு மக்களிடம் பெரும் எதிர்ப்பு உருவானது. இதனால், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜாஜி ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து காமராஜர் முதல்வரானார். 

பலருக்கு பதவி பெற்று தந்த காமராஜரால் எளிதாக முதல்வராகி விட முடியவில்லை. அப்போது, அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்பியாக இருந்தார். முதல்வராக வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று, எம்பி பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், முதல்வர் தேர்வில் காமராஜரை எதிர்த்து ராஜாஜி ஒரு வேட்பாளரை நிறுத்தினார். அவர் படித்த மேதையான சி. சுப்பிரமணியம். அவரை முன்மொழிந்தவர்தான் பக்தவச்சலம். இருவருக்கும் இடையே நடந்த போட்டியில் காமராஜர் வெற்றி பெற்றார். அவரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

//குடியாத்தத்தில் போட்டி//

மேலும், எம்எல்சியாக பதவியேற்று முதல்வராவதற்கும் காமராஜர் விரும்பவில்லை. இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ யாரையும் ராஜினாமா செய்யவும் அவர் சொல்லவில்லை. அப்போது, காலியாக இருந்த குடியாத்தம் தொகுதிக்கு தேர்தல் நடந்த போது, அதில் வேட்பாளராக களம் இறங்கினார். அது அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. அப்படி இருந்தும் அங்கு போட்டியிட்டு வெற்றி வகை சூடினார். 

பெருந்தலைவர் காமராஜர் 1954 ல் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். பொற்கால ஆட்சிக்கு அப்போது தான் பூபாளத்துடன் பொழுது புலர்ந்தது. தமிழகம் தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில் கர்மவீரர் காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

//யுகப்புரட்சி//

காமராஜர் கல்வியை மட்டுமா வளர்த்தார்? கீழ்பவானி, மணிமுத்தாறு, காவிரி டெல்டா, ஆரணியாறு, வைகை நீர்தேக்கம், அமராவதி, காத்தனுார், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, வீடுர் நீர்தேக்கம், பரம்பிக்குளம், நெய்யாறு, மேட்டூர் கால்வாய் திட்டம் என்று அவர் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாசன திட்டங்கள் தான் இன்றும் விவசாயத்தின் உயிர் நாடியாய் விளங்குகின்றன.நெய்வேலி நிலக்கரித் திட்டம், நீலகிரி பிலிம் தொழிற்சாலை, ஆவடி டாங்க் தொழிற்சாலை, மேட்டூர் காகித ஆலை, கிண்டி, எண்ணுார், அம்பத்தூர், திருமங்கலம், திருநெல்வேலி பேட்டை உட்பட மாவட்டம் தோறும் தொழிற்பேட்டைகள் பல்கிப் பெருகிப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய முதுகெலும்பாய் முளைத்துவிட்டதும் காமராஜர் தந்த பொற்கால ஆட்சியில் தான். திருச்சி பெல், காரைக்குடி சிக்ரி, ஆவடி டாங்க் தொழிற்சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை,  சென்னை மாதவபுரம் பால்பண்ணை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் என சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். சென்னையில் அவர் தொழில்களும், தொழிற்பேட்டைகளும் உருவாக்கிய இடங்கள் அனைத்தும் வளர்ச்சி அடைந்த பகுதியாக இப்போது உருவெடுத்துள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் ஒரு யுகப் புரட்சியை ஏற்படுத்தினார்.

//உயர் கல்வி சாதனை//

 திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மருத்துமனைக்கு சென்றால்,அதன் மெயின் பில்டிங் வாசலில் காமராஜர் அடிக்கல் நாட்டியதும், பின்னர் திறந்து வைத்ததும் தொடர்பான கல்வெட் இருக்கிறது. அதை இப்போதும் பார்க்கலாம். அதே போல் மதுரை மருத்துவ கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, சென்னை கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி என 5க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகள் காமராஜர் ஆட்சியில் அமைக்கப்பட்டன. இதன்மூலம் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்க வழி கோலினார்.  மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியை 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி அப்போதைய முதல்வர் காமராஜரும், அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜகுமாரி அம்ரித் கவுரும் தொடங்கி வைத்தனர். திருநெல்வேலி மருத்துவ கல்லுõரி 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் புனித சவேரியர் கல்லூரியில் வகுப்புகள் நடந்தன. இந்த கல்லூரி தொடங்கும் போது பக்தவச்சலம் முதல்வராக இருந்த போதிலும் இதை திருநெல்வேலிக்கு கொண்டுவந்ததில் காமராஜருக்கு முக்கிய பங்கு உண்டு. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி 1958ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்குஅடிக்கல் நாட்டியவர் அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திரபிரசாத். இந்த கல்லூரி முதலில் ராஜாமிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் இப்போதைய கட்டடம் இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. இந்த இடம் ஒரு நாடார் குடும்பத்துக்கு சொந்தமானது. ரோட்டரி கிளப் மூலம் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இதற்கு பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர்கள் காமராஜரும்,அப்போது எம்எல்ஏவாக இருந்த பரிசுத்த நாடாரும் என்பது குறிப்பிடத்தக்கது. கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி 1960ம்ஆண்டு தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர் மருத்துவகல்லூரி 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  

//பொறியியல் கல்லூரி புரட்சி//

சென்னையில் 1957ம் ஆண்டு ஆர்க்கிடெக்கர் மற்றும் பிளானிங் என்ற இன்ஜினியரிங் கல்லூரி தொடங்கப்பட்டது. சென்னை ஐஐடியை கொண்டு வந்தவர் காமராஜர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளை போல் உயர் கல்விக்கு ஐஐடி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,ஐஐஎம் எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனங்கள் கொண்டு வருவது குறித்து அப்போதைய பிரதமர் நேரு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.அது குறித்து நேருவிடம் காமராஜர் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு நேரு இந்தியாவில் உயர் கல்விக்கான புகழ் பெற்ற நிறுவனங்கள் தொடங்க யோசித்துவருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். உடனே காமராஜர்அப்படின்னா அதில ஒண்ண மெட்ராசுக்கு தாங்க என்று கேட்டுள்ளார்.எப்போதுமே காமராஜரின் பேச்சை தட்டாத நேரு உடனே ஓகே சொல்லி விட்டார். அப்படி வந்ததுதான் சென்னை ஐஐடி. இது தொடங்கப்பட்ட ஆண்டு 1959. அரசு நிதியுதவியுடன் இன்ஜினியரிங் கல்லூரிஅமைக்க அவர் ஊக்குவித்தார். அப்படி வந்ததுதான் கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. இது 1956ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரையில் தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி. இது தொடங்கப்பட்ட ஆண்டு 1957.  திருச்சியில் என்ஐடி நேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற மத்திய அரசின் கல்வி நிறுவனம் 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவும் காங்கிரஸ் ஆட்சியில வந்ததுதான். இதற்கும் காமராஜரின் பங்களிப்பு அதிகம்.ஆனால், அப்போது முதல்வராக இருந்தவர் பக்தவச்சலம்.  

//அறிவார்ந்த தமிழகம்//

இப்படி தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் ஆரம்பிப்பதில் மட்டும் அவர் புரட்சி செய்யவில்லை. மேல் படிப்புக்கான கலைக்கல்லூரிகள் மட்டுமல்ல, மருத்துவ கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி அமைப்பதிலும் அவர் புரட்சி செய்தார். அரசு மட்டுமே இத்தகைய அரிய செயலலை செய்ய முடியாது என்பதால், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் பள்ளிகள்,கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி கொடுத்தார். கல்வி நிலையங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை தனியார் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மற்றும்இதர ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு கொடுத்துவிடும்.  இத்தகைய கல்வி அடிப்படை கட்டமைப்புகளும்,  இலவச பள்ளிக்கல்வி, இலவச மதிய உணவுத்திட்டமும்தான் தமிழகம் இன்று அறிவார்ந்த சமுதாயமாக உயர்ந்து நிற்பதற்கு காரணம்.

//என்எல்சி வரலாறு//

என்எல்சி எனப்படும் நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் இப்போது பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா அந்தஸ்து பெற்றவைகளில் ஒன்று. இந்த பழுப்பு நிலக்கரி சுரங்கம் 1956ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அனல் மின் உற்பத்தி நிலையமும் தொடங்கப்பட்டது. இதை கொண்டு வந்தவர் காமராஜர். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய பிரதமர் நேரு கலந்து கொண்டார். அந்த விழாவில், ‘ நேரு பேசும் போது, எனக்கு இந்த திட்டத்தில் நம்பிக்கை இல்லை.  இந்த திட்டம் மூலம் நாட்டுக்கு லாபம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. காமராஜர் சொன்னதால்தான் இந்த திட்டத்துக்கு நான் ஒத்துழைக்கிறேன். அவர் சொன்னால் நான் எதையும் மறுப்பதில்லை. அவர் எதை செய்தாலும் நாட்டுக்கு நன்மையாகத்தான் இருக்கும்”என்றார். அப்போது குறுக்கிட்ட காமராஜர், ‘இதில் லாபம் இருந்தால் தமிழகத்துக்கு தருவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். உடனே, நேரு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலளிக்காமல் நிறுத்திக் கொண்டார்.

அடையாறு புற்றுநோய் மையத்தை உருவாக்க அரும்பாடு பட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்த மையம் 1954ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்தவர் அப்போதைய முதல்வர் காமராஜர்.

இன்றைக்கு தமிழக அரசின் மொத்த பட்ஜெட் தொகை பல லட்சம் கோடியை தாண்டி விட்டது. ஆனால், முதல்வராகப் பொறுப்பேற்ற 1954–55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962–63-ல் ரூ.121.81 கோடி. அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் மகத்தான காரியங்களை தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.

//முதல் திருத்தத்தின் மூலவர்//

தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இதற்கு எதிராக ஈவேரா பெரியார் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.  இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், அப்போது, பிரதமராக இருந்த நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெற அதற்கான உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.

//சமூக நீதியின் இலக்கணம்//

தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 14, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசுவரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். இவர் ஆதிதிராவிடர் ஜாதியை சேர்ந்தவர். கோயிலுக்குள் பட்டியல் இன மக்கள் செல்ல முடியாத நேரத்தில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பதவி என்றால், அதுதான் உண்மையான சமூக நீதிக்கான அங்கீகாரம். இத்தகைய அங்கீகாரத்தை காமராஜர்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக அளித்து புரட்சி செய்தார். சமூக நீதி என்று எத்தனையோ தலைவகர்கள் வார்த்தை ஜாலம் காட்டியிருக்கலாம். அதை நடைமுறைப்படுத்து, செயல் தலைவராக விளங்கியவர் காமராஜரைத்தவிர வேறு யாரும் கிடையாது. உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார். பின்னர் கக்கனை போலீஸ் மந்திரியாகவும் காமராஜர் நியமித்தார். அவரும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்தான். இதெல்லாம் காமராஜரின் சமூக நிதி செயல்பாடும். இவர் மற்றவர்களைப் போல் வாய்ச்சொல் வீரரர் அல்ல.

//இலவச மதிய உணவு// 

 காமராஜர் செய்த கல்வி புரட்சியின் காரணமாக 1957-ல் 15 ஆயிரத்து 800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29 ஆயிரமாக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 995 ஆனது. ராஜாஜியால் மூட்டப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளையும் திறந்தார். 300 மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளி, 2 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் நடுநிலைப்பள்ளி,  5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் உயர்நிலைப்பள்ளி என ஆரம்பித்து எஸ்எஸ்எல்சி வரை இலவச கல்வியும், இலவர சீருடை திட்டத்தையும் கொண்டுவந்தார். மாணவர்களுக்க ஸ்காலர்ஷிப் திட்டமும் காமராஜர் காலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

 இலவச மதிய உணவு திட்டத்தை 1956ம் ஆண்டு காமராஜர் அறிமுகம் செய்தார்.  இந்த திட்டத்தை காமராஜர் எங்கே தொடங்கி வைத்தார் தெரியுமா? தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையென்றால், ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதியார் பிறந்த இடமான எட்டயபுரத்தில்தான். இந்த திட்டத்தின்படி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மதிய உணவு வழங்கப்படும். முதலில் பிடி அரிசி மற்றும் பணக்காரர்களின் உதவியுடன் அரிசி இலவமாக வழங்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு வருபவர்களின்எண்ணிக்கை அதிகரித்தது. காமராஜரின் இந்த திட்டத்தை எண்ணி வியந்த அமெரிக்காவின் கேர் நிறுவனம் டால்டா எண்ணெய், பால் பவுடர், கோதுமை, மக்காச்சோளம் போன்றவற்றை இலவசமாக வழங்கியது. இதனால் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் அரிசி உணவும், மற்ற நாட்களில் கோதுமை மற்றும் மக்காச்சோள உப்புமாவும் வழங்கப்பட்டன. இந்த உணவுகள் அமெரிக்கா வழங்கிய டால்டா எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்டன. இது தவிர மாலை நேரத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் பவுடர் வினியோகிக்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரின் கண்காணிப்பில் செயல்படுத்தப்பட்டது. 

//சிவாஜி ஒரு லட்சம் //

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை 1982ம் ஆண்டு ஆரம்பிக்கும் வரை அறிஞர் அண்ணா ஆட்சியிலும், கலைஞர் கருணாநிதி ஆட்சியிலும், 1977 முதல் 1982 வரை எம்ஜிஆர் ஆட்சியிலும் இந்த மதிய உணவு திட்டம்தான் செயல்பாட்டில் இருந்தது. இப்போது மற்றவர்கள் கூறுவது போல் அங்கொன்றும், இங்கொன்றும் என்று இல்லாமல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவியுடன் செயல்படும் தனியார் பள்ளிகளிலும் இந்த மதிய உணவு திட்டம் செயல்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் அருமையை உணர்ந்த அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடு முழுவதும் விரிவாக்கினார். இந்த திட்டத்துக்காக அப்போது நேருவிடம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார். அது இன்றைய மதிப்பில் கோடி ரூபாய்க்கு சமமாகும். 

//சத்துணவு திட்டம்//

எம்ஜிஆர் ஆரம்பித்த சத்துணவு திட்டம் முதலில் பள்ளி மாணவர்களுக்கானது அல்ல. அது ஒன்றாம் வகுப்புக்கு கீழ் உள்ள வயதுடையோருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். இதற்காக கிராமங்களில் சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்காக கட்டடம் கட்டப்பட்டு, அங்கு சத்துணவு ஆயாக்கள், அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் அதை நடத்த எம்ஜிஆர் தன்னுடைய தலைமையில் ஒரு குழு அமைத்தார். அதில் தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன், அதிமுகவின் அப்போதைய கொள்கை பரப்பு செயலாளர் ஜெயலலிதா ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்தார். நன்கொடை வாங்கி செயல்படுத்தினார். அது முடியாமல் போனதால் பட்ஜெட்டின் கீழ் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து, மதிய உணவு திட்டத்துடன் இணைத்து ஒருங்கிணைந்த சத்துணவு திட்டம் என்று பெயர் மாற்றி பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினர். பின்னர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் என்று ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

//தலை நிமிர்ந்த தமிழகம்//

 1952ல் முதல்வராக பதவியேற்ற காமராஜர் செயல்படுத்திய இலவச கல்வி, இலவச மதிய உணவு திட்டத்தால்தான் தமிழகம் இன்று கல்வி வளர்ச்சியில் தலை நிமிர்ந்துள்ளது. காமராஜர் காலத்துக்கு முன்னர்  கல்வி ஏழைகளுக்கும், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. இந்த பிரிவினரின் மக்கள் இன்று கல்வி பெற்று, உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு பலமான அடித்தளமிட்டவர் காமராஜர். அவருடைய காலத்தில் கல்வி கற்க ஆரம்பித்தவர்கள் 11ஆண்டுகள் கழித்துதான் எஸ்எஸ்எல்சி முடித்திருப்பார்கள். 14 ஆண்டுகள் கழித்துதான் பிஏ,பிஎஸ்சி முடித்திருப்பார்கள், 15 ஆண்டுகள் கழித்துதான் பிஇ, எம்பிபிஎஸ் முடித்திருப்பார்கள். அப்படியானால், முதல் செட் மாணவர்களே1970களில்தான் பயன் அடைந்திருப்பார்கள். முதல் தலைமுறை 1980களில்தான் நல்ல பயனை பெற்றிருப்பார்கள். இதேபோல் ஏராளமான அணைக்கட்டுகள் மூலம் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டது. மேலே கூறப்பட்ட தொழிற்சாலைகள் மூலம் தொழிற்புரட்சி ஏற்பட்டு, வேலைவாய்ப்பு கிடைத்தது. மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, கிராமப்புற மின் வினியோக திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மூலம் ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெற வழி ஏற்பட்டது.  ஆனால், 1967ல் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அதன்பின்னர் திராவிட ஆட்சிகள் காலூன்றி விட்டன. காங்கிரஸ் செயல்படுத்திய திட்டங்களால் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் பலன்கள் அனைத்தும் திராவிட கட்சிகளால்தான் உருவானது என்பது போல் காட்டிக் கொள்கின்றனர். 

//அப்பப்பா எத்தனை சாதனை//

இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ் இண்டஸ்ட்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.

//2வது ஐந்தாண்டு திட்டம்//

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப் பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.

இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைக்கால்வாய் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத் திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அந்த மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.

//வியத்தகு மின் உற்பத்தி//

காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. குந்தா திட்டம், பெரியாறு நீர்மின்சக்தி திட்டம் என்றும் செயல்படுத்தி எல்லா கிராமங்களிலும் மின்சாரம் உள்ள ஒரே மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியதும் காமராஜர் ஆட்சி தான் காமராஜர் சுதந்திர இந்தியாவில் 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து இந்த மண்ணில் கடைசித் தமிழன் உள்ளவரை மறக்க முடியாத சாதனைகளை செய்தார்.

மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.

சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.

//நிலச்சீர்திருத்தம்//

காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் – 1955’ ???????? <டttணீண்://தீதீதீ.டடிணஞீதtச்ட்டிடூ.டிண/ண்ஞுச்ணூஞிட/%உ0%அஉ%95%உ0%அஉ%ஆஉ%உ0%அஉ%அஉ%உ0%அஉ%ஆ0%உ0%அஉ%ஆஉ%உ0%அஉ%9இ%உ0%அஉ%ஆ0%உ0%அஊ%8ஈ?தtட்சுண்ணிதணூஞிஞு=ண்டிtஞு-தtட்சுட்ஞுஞீடிதட்=ச்ணூtடிஞிடூஞுசுடிணடூடிணடு-தtட்சுஞிச்ட்ணீச்டிஞ்ண=ச்ணூtடிஞிடூஞுசுடிணடூடிணடு> ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.

//பஞ்சாயத்து ராஜ்//

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

//தமிழ் மொழி சாதனை//

சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் ???????? <டttணீண்://தீதீதீ.டடிணஞீதtச்ட்டிடூ.டிண/ண்ஞுச்ணூஞிட/%உ0%அஉ%95%உ0%அஉ%ஆஉ%உ0%அஉ%அஉ%உ0%அஉ%ஆ0%உ0%அஉ%ஆஉ%உ0%அஉ%9இ%உ0%அஉ%ஆ0%உ0%அஊ%8ஈ?தtட்சுண்ணிதணூஞிஞு=ண்டிtஞு-தtட்சுட்ஞுஞீடிதட்=ச்ணூtடிஞிடூஞுசுடிணடூடிணடு-தtட்சுஞிச்ட்ணீச்டிஞ்ண=ச்ணூtடிஞிடூஞுசுடிணடூடிணடு> ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

//தமிழ்நாடு பெயர் மாற்றம்//

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.

//பெரியார் மரண வாக்குமூலம்//

காமராஜர் ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப் பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, கட்சியைக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.

1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அப்போது பெரியார் பேசியதாவது: 

தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.

தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது. இவ்வாறு பெரியார் பேசினார்.

//கல்லால் அடிக்கிறோம்//

காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?

கல்வி, தொழில், விவசாயம், சுகாதாரம், மின்சார வசதி, சாலை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் என பல முனைகளிலும் உயர்த்தி, தொழில் முன்னேற்றத்தில் இந்தியாவிலேயே 2வது இடத்துக்கு தமிழகத்தை கொண்டு வந்து பெருமைப்படுத்திய காமராஜரை இந்த மக்கள் தோற்கடித்தனர். இப்போதும் அவரால் முன்னுக்கு வந்த சமுதாய மக்கள் அவருடைய சிலையை உடைத்தும், அவ மரியாதை செய்தும் வருகின்றனர். தமிழகத்தில் பிறக்காமல், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் காமராஜர் பிறந்து இத்தகைய புரட்சிகரமான செயல்களை அங்கு செய்திருந்தால், அவருக்கு ஊர் ஊருக்கு சிலை வைத்து கொண்டாடி இருப்பார்கள். நன்றி மறந்த தமிழன் அவரை கல்லால் அடிக்கிறான்.

**