‘‘தோல்வியில் பாடம் கற்கணும்’’
சொல்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன்

விளையாட்டு

அமைதி பெரும் பலம் என்கிறார் விராட் ஹோலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முதல் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் பைனலில் மோதின. இதில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் ஆடிய 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு சவாலான இலக்கு என்று கருதப்பட்டாலும், இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுக்கும் பரிதாப நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்த தோல்வியை இந்திய ரசிகர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும், இரு அணிகளுக்கு இடையேயான வெற்றி ரன்கள் வித்தியாசம் இந்திய ரசிகர்களை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது. இந்த தோல்வி பற்றி இப்போது பல முன்னணி வீரர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இதில் இந்திய முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,‘‘அமைதி பெரும் பலத்தின் ஆதாரம்’’ என்று பதிவிட்டுள்ளார். விராட் கோலியால் இந்த முடிவு பற்றி எந்த கருத்தும் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் அவரால் மவுனமாக இருந்துவிடவும் முடியவில்லை. இதனால்தான் இப்படி ஒரு கருத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இந்த விஷயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியிருக்கும் கருத்து உற்று நோக்கக் கூடியது. அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்! ‘‘இந்திய முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பாபர் ஆசம், கானே வில்லியம்சன் ஆகிய வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று நாசர் உசேன் கூறியுள்ளார்.