விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!
2018ஆம் ஆண்டுக்கு பிறகு கமல் ஹாசனில் திரைப்படம் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாஸ்டர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஃபகத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று வெளியிட்டுள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். க்ளைமேக்ஸ் காட்சியின்போது சூர்யா படத்தில் இடம்பெறுவார் என்றும், இந்த காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமையும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
விக்ரம்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘விக்ரம்’ படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஜூன் 3ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.