பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் பைக்கை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தபோதே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அருண் ராமலிக்கம் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவி இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்துவிட்டது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பைக் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் ஆழ்வார்பேட்டை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

Previous post இளைஞர் திறன் திருவிழா முதல்வர் ஆற்றிய உரை!
Next post விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!
%d bloggers like this: