அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனால், ஏற்பட்ட கால தாமதம் காரணமாக குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு தேர்வு செயல்முறைகளில் மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளதால், தேர்வாணையம் அதற்கு ஏற்றாற்போல் மாற்றங்களைச் செய்து வருகிறது. எனவே கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிச்சயம் பொதுப்போட்டியில் கட் ஆஃப் குறைவாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
