இந்திய அணியின் தேர்வுக்குழு கலைப்பு…

விளையாட்டு

டி20 உலககோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஒட்டுமொத்த தேர்வுக்குழுவினரையும் பிசிசிஐ அதிரடியாக கலைத்துள்ளது.

குறிப்பாக, பும்ரா விவகாரத்தில், அவர் முழுமையாக குணம் அடையாத நிலையில், அவரை ஆஸ்திரேலிய தொடரில் விளையாட வைத்து தவறு செய்துவிட்டோம் என்று சேத்தன் சர்மா கூறினார். இப்படி தவறை வெளிப்படையாக ஒப்பு கொண்ட பிறகும், அவர் அந்த பொறப்பில் நீடிப்பது சரியல்ல என்பதால், பிசிசிஐ இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

2021 மற்றும் 2022 என இரண்டு உலககோப்பையையும் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு தான் தேர்வு செய்தது. சேத்தன் சர்மா தலைமையிலான குழுவே விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதில் முக்கிய பங்கு ஆற்றியது. மேலும், பல மூத்த வீரர்களை தொடர்பு கொண்டு, நீங்கள் ஓய்வு பெற்றுவிடுங்கள், இனி உங்களை தேர்வு செய்ய மாட்டோம் என்று கூறி சர்ச்சையில் சிக்கியது.

மேலும் பிரித்வி ஷா போன்ற வீரரை காரணமே இல்லாமல் நீக்கியது, ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியது என பல செயலிலும் ஈடுபட்டது. இவ்வளவு நாள் சவுரவ் கங்கலியின் தயவால் சேத்தன் சர்மா தலைமையிலான குழு தொடர்ந்து அந்த பணியில் இருந்தனர். தற்போது புதிய தலைமை பிசிசிஐக்கு வந்துள்ளதால், முதல் பணியாக சேத்தன் சர்மா தலைமையிலான குழுவை அதிரடியாக நீக்கியுள்ளது.

தற்போது புதிய தேர்வுக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு விண்ணபிக்க கூறி, பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 7 டெஸ்ட் போட்டி அல்லது 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர்கள் ஆகிய தகுதி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவர்கள் தான் இந்த பணிக்கு விண்ணபிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *