வார்னே நினைவுகளை பகிர்ந்த சச்சின், லாரா

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத பல ஆட்டங்களை 90 ஸ் கிட்ஸ்க்கு கொடுத்த மிக முக்கிய வீரர்கள் சச்சின் டென்டுல்கர், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், பிரெயின் லாரா ஆகியோர் இருந்தனர். இவர்களில் வார்னே கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதன் மூலம் ஸ்பின் லெஜெண்டாக திகழும் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரது சாதனைகள் பற்றி நினைவு கூறும் விதமாகவும் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன.

வார்னேவின் சிறந்த ஆட்டங்களில் முக்கியமானவையாக டென்டுலர்கருக்கு எதிராக இந்தியாவிலும், லாராவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸில் விளையாடிய போட்டிகளாகவும் அமைந்துள்ளன. இந்த போட்டிகளில் மூலம் இவர்களுக்கு இடையேயான நட்பு மிகவும் வலிமையானது. இறந்துபோன வார்னேவுடனான நினைவு குறித்து பல்வேறு தலைப்புகளில் டென்டுல்கரும், லாராவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் நடைபெற்ற தலைவர்கள் உச்சி மாநாடு 2022இல் உரையாடினார்கள்.

இந்த உரையாடலின்போது டென்டுல்கர் பேசுகையில், வார்னேவுக்கு தனது வீட்டில் உணவு விருந்து ஏற்பாடு செய்த சம்பவம் பற்றி நினைவு கூர்ந்தார். அதில், “வார்னேவை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். முதலில் இந்திய உணவு அவருக்கு பிடிக்குமா என உறுதி செய்து கொண்டேன். அப்போது அதிக காரம் வேண்டாம் என சமையல்காரரிடம் கூறி, அதற்கு ஏற்ப தயார் செய்யுமாறு கூறினேன்.

அந்த உணவு விருந்துக்கு எனது மேனேஜரையும் அழைத்தேன். நாங்கள் எல்லோரும் டேபிளில் உட்கார்ந்து உணவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டோம். அப்போது வார்னேவுக்கு உணவு வைத்த பின்பு, அதிலிருந்து கொஞ்சம் சாப்பிட்ட அவர் சில நிமிடங்கள் சுற்றி பார்த்தார்.

இதை கவனித்த நான், அவரிடம் உணவு பிடித்துள்ளாதா? உங்களுக்கு சரியாகத்தானே உள்ளது. காரம் அதிகமாக உள்ளதா? எனக் கேட்டேன். இதற்கு அவர், ரொம்பவும் சுவையாக உள்ளது என்றார் வார்னே. எனது மேனேஜரும் வார்னேவை தட்டி கொண்டு என்ன நடந்தது எனக் கேட்டார். அதற்கு அவரிடம், உணவு மிகவும் காரமாக உள்ளது. இதை சச்சினிடம் சொல்ல முடியாது. என்னிடமிருந்து உணவு கொஞ்சத்தை எடுத்துக்கொள்கிறீர்களா என்று கூறியுள்ளார்.

நாங்கள் இருவரும் சமையலறையில் இருந்தபோது, தனது சாப்பாடு பற்றி விவரித்த வார்னே வேகவைத்த பீன்ஸ், இறைச்சி துண்டுகள் சாப்பிடுவது பற்றிதான் உரையாடினோம். கடைசியாக அன்றைய நாளில் வார்னேவுக்கு பீட்சாவை ஆர்டர் செய்து சாப்பிட வைத்தோம்.

இங்கு முக்கியமான விஷயமாக எனது உணர்வை எந்த வகையில் புண்படுத்த வார்னே நினைக்கவில்லை. உணவு விஷயத்தில் அவர் அதை சரியாக கையாண்டார். ஆனால் அன்றைய நாளில் மற்றொரு முக்கிய விஷயமாக வார்னேவுக்கு இந்திய உணவுகள் அறவே பிடிக்காது என்பதை கண்டறிந்தேன்” என்று விவரித்தார்.

சச்சினை தொடர்ந்து பிரெயின் லாரா, வார்னே பற்றி நினைவலைகளை கூறும்போது, “நாங்கள் இருவரும் ஒன்றாக கோஃல்ப் விளையாட்டு விளையாடுவோம். அப்போது அவர் ஏன் மிகவும் சிறப்பானவர் என்பதை புரிந்து கொண்டேன். வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு பெளலிங் செய்யும்போது எவ்வளவு போட்டியாக செயல்படுவாரோ, அந்த அளவுக்கு கவனம் சிதறாமல் அவர் கோஃல்ப் விளையாடுவார். இந்திய துணை கண்டங்களில் பல்வேறு பேட்ஸ்மேன்களுக்கு அவர் பெளலிங் செய்துள்ளார்.

ஆனால் அவருக்கு திருப்புமுனை டெஸ்ட் போட்டியாக 1992இல் மெல்போர்னில் நடைபெற்ற போட்டி அமைந்தது. அந்த ஆட்டத்தில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அங்கே தொடங்கி நம்பமுடியாத அளவில் நட்சத்திர ஸ்பின்னராக உருவெடுத்தார்.

க்ளைவ் லாய்ட் போன்ற ஜாம்பவான் வீரர்கள் டெஸ்ட் போட்டி வெற்றி பெறுவதற்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்கிற கான்செப்டை உடைத்தார். அவரது ஸ்பின் பெளலிங் மிகவும் அபாரமாக இருந்தது. எங்கள் காலத்தில் அவரும், முரளியும் என இரண்டு சிறந்த ஸ்பின்னர்களுடன் விளையாடினோம்” என லாரா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *