கடந்த 2003-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்த படம் ‘வின்னர்’. இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிகை கிரண் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நம்பியார், வடிவேலு, ரியாஸ் கான் மற்றும் பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. சமீபத்தில் வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என பேட்டி ஒன்றில் நடிகர் பிரசாந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் இப்படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு சமீபத்தில் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.