Fri. Dec 6th, 2024

IBPS வங்கி பணிகளுக்கு அறிவிப்பு வந்தது!

By admin Jun7,2024 ##bankJobs ##jobs ##TNjobs

PO, கிளார்க் அல்லது அதிகாரி கிரேடு II அல்லது அதிகாரி கிரேடு III ஆக பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஜூன் 07 முதல் ஜூன் 26 வரை https://www.ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு பிரிமிலரி மற்றும் மெயின் ஆகிய இரண்டு தேர்வுகளை ஆன்லைனில் எதிர்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு கிராம வங்கி, ஆந்திரா கிராம வங்கி, கேரளா கிராம வங்கி, கர்நாடகா கிராம வங்கி, அருணாச்சல பிரதேச கிராம வங்கி, சத்திஸ்கர் கிராம வங்கி, குஜராத் கிராம வங்கி, புதுச்சேரி கிராம வங்கி என இந்தியாவில் உள்ள மொத்தம் 47 கிராம வங்கிளுக்கும் 9995 ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 110 அதிகாரிகள் பணியிடங்களும், 377 அலுவலக உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு கிராம வங்கி உள்பட பல்வேறு வட்டார கிராமப்புற வங்கிகளில் அதிகாரிகள் மற்றும் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தம் 9995 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் 110 அதிகாரிகள் பணியிடங்களும், 377 அலுவலக உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.

அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு): 5585
அதிகாரி கிரேடு I: 3499
அதிகாரி கிரேடு-II (வேளாண்மை அதிகாரி): 70
அதிகாரி கிரேடு-II (சட்டம்): 30
அதிகாரி கிரேடு-II (CA): 60
அதிகாரி கிரேடு-II (IT): 94
அதிகாரி கிரேடு-II (பொது வங்கி அதிகாரி): 496
அதிகாரி கிரேடு-II (மார்க்கெட்டிங் அதிகாரி): 11
அதிகாரி கிரேடு-II (கருவூல மேலாளர்): 21
அதிகாரி கிரேடு III: 129

IBPS RRB தகுதிகள்: அதிகாரி கிரேடு I உள்பட அனைத்து பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயது வரை உள்ள பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.. வயது வரம்பு என்பது எஸ்சி எஸ்டிக்கு 5 வருடமும், ஓபிசிக்கு 3வருடமும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. விதவைகள், கணவனை இழந்தவர்கள் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். அலுவலக உதவியாளர் பணியிடங்களை தவிர மற்ற பணியிடங்களுக்கு டிகிரியில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருப்பது கட்டாயம் ஆகும்.

IBPS RRB அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் முறை:

அதிகாரி கிரேடு I முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு & நேர்காணல் ஆகிய முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்
அலுவலக உதவியாளர்கள் முதல்நிலைத் தேர்வு & முதன்மைத் தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்
அதிகாரி கிரேடு II & III எழுத்துத் தேர்வு & நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

IBPS RRB தேர்வுகள் 2024

பிரிமிலரி (அலுவலக உதவியாளர்கள் & அதிகாரி கிரேடு I) ஆகஸ்ட், 2024
சிங்கிள் தேர்வு (அதிகாரிகள் கிரேடு II & III), மெயின் தேர்வு (அதிகாரி கிரேடு I) செப்டம்பரில் நடைபெறும்.
முதன்மை தேர்வு (அலுவலக உதவியாளர்கள்) அக்டோபர் மாதத்தில் நடைபெறும்.

இந்ததேர்வு குறித்த அறிவிப்பாணை மற்றும் முழு விவரங்களை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் பாருங்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாருங்கள்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading