இந்திய அணியில் அறிமுகமாவதற்கு சுரேஷ் ரெய்னாதான் காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது, “எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய எமர்ஜிங் அணி ஒரு தொடரில் விளையாடி கொண்டிருந்தது. அந்த தொடரில் நான் வெளியில் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த தொடரின் பாதியில் அணிக்கு வந்த சுரேஷ் ரெய்னா கேப்டனாக பொறுப்பேற்றார்.
அப்படி பொறுப்பேற்றதும் வலைப்பயிற்சியில் விளையாடிய என்னுடைய ஆட்டத்தை பார்த்து அப்போதைய பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவிடம் ஏன் இவரை விளையாட வைக்கவில்லை? என்று கேட்டார். உடனே அவரும் ரகானே தொடக்க வீரராக விளையாடுவதால் நான் மிடில் ஆர்டர் களமிறக்கப்பட்டு பின்னர் என்னை இறக்குவதற்கான இடம் இல்லை என்று கூறிவிட்டார்.
அப்போது ரெய்னாதான் நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று அவரிடம் வற்புறுத்தினார். உடனே பிரவீன் ஆம்ரே எனக்கு போன் செய்து துவக்க வீரராக விளையாடுகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் எங்கு இடம் கிடைத்தாலும் விளையாடுவேன் என்று கூறினேன். பிறகு உடனே நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி சதம் அடித்ததும் எனக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் இல்லையென்றால் நான் இந்திய அணியில் விளையாடி இருக்க முடியாது” என்று கூறினார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.