2024-25 நிதியாண்டு தொடங்கியதில் இருந்து மத்திய அரசு பல்வேறு விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. வங்கியில் மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு, வருமான வரி, பிஃஎப் பணம், சிறு சேமிப்பு திட்டங்கள் என்று அனைத்துக்கும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டண விதிகளும் இருக்கிறது.
டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணங்களை (Debit Card Maintenance Charges) வங்கிகள், அதன் வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் இருந்து பிடித்தம் செய்வது வழக்கம். இந்த தொகை ஏப்ரல் 1ஆம் தேதி முன்பு குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த நிதியாண்டில் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
எஸ்பிஐ வங்கியின் (SBI Bank) கிளாசிக் கார்டு (Classic Card), சில்வர் கார்டு (Siver Card), குளோபல் கார்டு (Global Card) மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டு (Contactless Debti Card) ஆகியவற்றுக்கு முன்னதாக ரூ.125 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக விதிக்கப்பட்டது. இப்போது, ரூ.200 மற்றும் ஜிஎஸ்டியாக உயர்த்தப்பட்டுள்ளது.
யுவா கார்டு (Yuva Card), கோல்டு கார்டு (Gold), காம்போ டெபிட் கார்டு (Combo Debit Card) மற்றும் மை கார்டு (My Card) ஆகியவற்றுக்கு முந்தைய நிதியாண்டில் ரூ.175 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது ரூ.250 மற்றும் ஜிஎஸ்டியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்பிஐ பிளாட்டினம் டெபிட் கார்டு (SBI Platinum Debit Card) வாடிக்கையாளர்களுக்கு முந்தைய நிதியாண்டில் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.250 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம், இப்போது ரூ.325 மற்றும் ஜிஎஸ்டியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல எஸ்பிஐ பிரைடு (SBI Pride), எஸ்பிஐ பிரீமியம் (SBI Premium) டெபிட் கார்டுகளுக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிளாசிக், சில்வர், குளோபல் மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளை புதிதாக வாங்க வேண்டுமானால் எந்த கட்டணமும் கிடையாது. ஆனால், கோல்டு டெபிட் கார்டுக்கு ரூ.100 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். அதேபோல பிளாட்டினம் மற்றும் மை கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
மேலும், டெபிட் கார்டு மாற்றுதல் (Debit Card Replacement) செய்தால் ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.