டிரம்ப் கருத்துக்கு இந்தியா மறுப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, இந்தியா-சீனா இடையே நிலவும் மோதல் பற்றி அவர் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து, டிரம்ப் கூறியதாவது:
இந்திய பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மிகப்பெரிய மோதலில் மோடி நல்ல மனநிலையில் இல்லை. இந்த நாட்டில் மீடியாக்கள் என்னை விரும்புவதை விட இந்தியாவில் அவர்கள் என்னை அதிகமாக விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன். மோடியை நான் விரும்புகிறேன். இந்திய பிரதமர் மோடியை நான் மிகவும் அதிகமாக விரும்புகிறேன். மோடி ஒரு ஜென்டில்மேன்.
சீனாவும், இந்தியாவும் தலா 140 கோடி மக்களை கொண்டுள்ள நாடுகள். இரு நாடுகளிடமும் சக்திவாய்ந்த ராணுவம் உள்ளது. எனினும், இரு நாடுகளுமே இப்போது மகிழ்ச்சியாக இல்லை.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
சீனா-இந்தியா எல்லை பிரச்னையில் நடுவராகவோ, தூதுவராகவோ இருந்து மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அறிவித்த மறுநாள் இத்தகைய கருத்தை கூறி டிரம்ப் அதிர வைத்தார். டிரம்ப் கருத்தை இந்தியா நிராகரித்தது. மேலும், எல்லையில் அமைதியை பராமரிக்க சீனாவுடன் ராணுவ ரீதியிலும், துõதரக ரீதியிலும் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியுறவு செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று முன்தினம் தெரிவித்தார். எனினும், இந்த பிரச்னையில் டிரம்ப் ஏதாவது கூறிக் கொண்டே இருக்கிறார். ஆனால், ‘ டிரம்ப்புடன் மோடி சமீபத்தில் பேசவில்லை” என்று வெளியுறவுத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘ இருவருக்கும் இடையே நடந்த கடைசி உரையாடல் ஹைட்ரோக்சிகுளோராகுயின் மாத்திரைகள் தொடர்பானதுதான். இந்த உரையாடல் கடந்த ஏப்ரல் 4ம் தேதி நடந்தது”என்றார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.