ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி அப்துல் கரீம் என்ற போரோ கரீமை கோல்கத்தா சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். முர்ஷிதாபாத் மாவட்டம் லங்கிபுர் பகுதியில் சுதி பிஎஸ் என்ற இடத்தில் மடக்கிப்பிடித்தனர். ஜேம்பி தலைவர் சலாகுதீன் சலேஹின் உட்பட பல தீவிரவாத தலைவர்களுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தவன் அப்துல் கரீம். 2014ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கரீம் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து தேடிவந்தது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.